கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்

அக்கினி வெயிலின்
உக்கிரம் தணிக்கும்
கோடை மழையின்
கொஞ்ச நேர துறலில்......

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

புள்ளி விபரங்களை
அள்ளி அள்ளிச் சொல்லியும்
கிள்ளி எறியப்படுகிறது?!.....
"குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு "
என்கிற வாசகம்....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

பொதி மூட்டை
சுமக்கத் தயாராகிவிட்டனர்
நமது தவப்புதல்வர்கள்.....
கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

கண்டன அறிக்கைகளின்
எண்ணிக்கையில் கரைந்துபோகிறதோ?!.....
பெட்ரோல் விலை உயர்வு!!.....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

தாய்ப்பால் மறக்கடிக்கும் தங்க தாய்மார்களே!!.....
பசும்பால் மறுக்கும் பச்சிளம் குழந்தைகளே!!.....
பால் பவுடரிலும் புழுக்கள் புரள்கிறதாம்?!.......

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

தாகமெடுக்கிறதாம்
தண்ணீர் குடத்திற்கு?!....
உபயோகப்படுத்தப்படாத
அடிகுழாய் ஆதங்கப்படுகிறது!!.....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

முதலை வாய்
ஆழ்துளைக் கிணறு
திறந்தே கிடக்கிறது?!....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

நடவு செய்த மரங்களைக்காட்டிலும்
இழவு செய்த மரங்களே அதிகம் அதிகம்?!....

கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்!!.....

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (9-Aug-15, 5:03 pm)
பார்வை : 90

மேலே