தேங்கி நிற்கும் கண்ணீரின் ரேகை 555

அன்பே...
வலிக்கும் என்று
பயந்திருந்தாள்...
நான் காதலிக்க அல்லவா
பயந்திருக்க வேண்டும்...
நான் சுவாசிக்க உன் சுவாசம்
இல்லை என்றாலும்...
உன் நினைவுகள்
போதுமடி எனக்கு...
எத்தனை முறை உன்னிடம் நான்
காயங்களோடு திரும்பினாலும்...
என் இதயம் மட்டும் உன்னை
வெறுத்ததில்லையடி...
என் காதல் உன்னிடம்
நிராகரிக்கபடும் போதெல்லாம்...
என் வீட்டு மொட்டை
மாடியில் தான்...
என் கண்ணீரின் ரேகை
அதிகம் பதிந்திருக்கும்...
நீ என் விழி ஓரத்தில்
இருப்பதால்.....