ஏக்கமோ

ஏக்கமோ சோகமோ ஏகாந்தம் ஏனென்று
சீக்கிரம் கூறினால் தேற்றுவேன் ! - போக்கிடம்
இல்லையோ? சொந்தமும் ஏற்க மறுத்ததோ
சொல்லிடு தீர்ப்பேன் துயர் .

வண்டலூர் வந்தால் வருத்தமெலாம் மாறிடும்
எண்ணற்ற நண்பர் இருப்பரிங்கே ! - மண்புகும்
நாள்வரையில் வாழலாம் ஞாலத்தில் இன்பமாய்
தோள்கொடுத்துத் தாங்குவர் சூழ்ந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-Aug-15, 10:23 pm)
பார்வை : 259

மேலே