எப்போது

தித்திக்கும் திங்கள் அவள்
திருமுகம் காண,
தினம் தினம் பல பொய்கள்!

அழகே உன்னைக் காண,
அணுதினமும் என் வேலைகளை கடந்து
அலைந்துக் கொண்டிருக்கிறேன் உன் பின்னால்!!

சில தருணங்களில் தித்திக்கும் சிரிப்பு!
சில தருணங்களில் பார்க்காமல் மறுதலிப்பு!
சில தருணங்களில் பார்வைகளில் பதில்கள் ஏனோ?

மழைத்துளி மண்ணைத் தேடிவருவது போல,
மங்கை உன் மனதில் - என்
மனதை தேடி வருகிறேன்!!

அமைதி என்னும் கடலில்
அலையாய் நீயும்,
அதன் கரையில் மணலாய் நானும்,
அன்பு எனும் காதலில் இணைவது எப்போது??

எழுதியவர் : தமிழரசன் (11-Aug-15, 3:29 pm)
பார்வை : 94

மேலே