இது பெண்களுக்கல்ல
இது பெண் களுக்கல்ல
கடவுளின் அற்புத அவதாரம்
உன்னதமான படைப்பு
ஆண் என்பவன்
தியாகம் செய்பவன்
இனிப்பு பதார்த்தங்களை
சகோதகரிக ளுக்காக..
நத்தைக் கூட்டுப் போல்
எதிர்காலக் கனவுகளை மறைத்து மனபாரங்களை பனியாக்கி
தியாகியாய் வாழ்பவன்
பெற்றோர்கள் சந்தோசத்திற்காக...
தன்னைப் பற்றிக் கவலைப் படாமல்
எதிரியாக இருந்தாலும் சரி
காதலியாக இருந்தாலும் சரி
காலியாகும் அவன் பணப் பை..
இளமையை அடகு வைத்து
சிறிதும் கலங்காமல் பதராமல்
அயராது உழைத்து உயர்பவன்
தன் மனைவி மக்களுக்காக...
எதிர்காலைத்தை வண்ணமாக்க
கடன் வாங்கியே காலங்கழித்து
அதனை அடைப்பதற்காக
மனதிற்குள் புழுங்கி அழுது
ஆமை ஓடுக்குள் நுழைந்து
புழுங்குவதைப் போல ...
தன் வாழ்நாளில் ஆயுள் முழுக்க
தன்னை முடிந்தவரை மெழுகாய்
அர்ப்பணிப்பவன் அடுத்தவர்களின்
இன்ப துன்பத்திற்காக...
அலுவலகத்திலும் வீட்டிலும்
கிடைக்கும் தர்ம திட்டுஅடிகளையும்
பொறுத்துக்கொண்டு போராடுபவன்
எதிர்கால நலன் களுக்காக...
"உதவாக்கரை"
வெளியே சும்மா சுற்றித் திரிந்தால்
"சோம்பேறி"
வீட்டிலேயே சும்மா கிடந்தால்...
"கோபக்காரன்"
குழந்தைகளைக் கண்டித்தால்
"பொறுப்பற்றவன் "
கண்டிக்கவில்லையென்றால்...
"நம்பிக்கையற்றவன்"
மனைவியை வேலைக்கு அனுப்பாவிட்டால்
"பொண்டாட்டி சம்பாத்தியத்தில் வாழ்பவன் "
வேலைக்கு அனுப்பினால்...
"அம்மா பைய்யன்"
அம்மா பேச்சைக் கேட்டால்
"பொண்டாட்டி தாசன்"
மனைவி சொல்வதைக் கேட்டால்...
எல்லாவித எக்கச்சக்கமான ஆசாபாசங்களுக்கெல்லாம்
குட்டுப்பட்டு கட்டுப்பட்டு
இரும்பான இதயத்தோடு
கரும்பாக எல்லாரையும்
இனிக்கவைத்து ரசிக்கவைத்து
தாயாய் தந்தையாய் நண்பனாய்
சகோதரனாய் சான்றோனாய்...
அவமானப்பட்டு வேதனைப்பட்டு
விட்டில் பூச்சியாய் தினம் தினம்
தியாகங்களாலும் வியர்வையாலும்
உழைத்துழைத்து
மவுனமாய் வாழும் இனம்
எங்கள் (ஆண்கள்) உலகம்தான்..!