மந்தீப்

என்னடா ஓம் பையனுக்கு மந்தீப்ன்னு பேரு வச்சிருக்க?

டேய் எங்க எதிர்வீட்டுக்காரனுக்கும் எங்களுக்கும் எல்லா விஷயத்திலும் ஏட்டிக்குப் போட்டி. அவன் தன்னோட பையனுக்கு சந்தீப்ன்னு பேரு வச்சிருக்கான். நான் சும்மா இருப்பேனா அவனுக்குப் போட்டியா எம் பையனுக்கு மந்தீப்ன்னு பேரு வச்சிருக்கேன்.

சரிடா எல்லாம் போட்டி போட்டுட்டு வெறித்தனமா பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறீங்களே அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?

மத்தவங்க கதை எப்படியோ.நான் போட்டிக்கு என் பிள்ளைகளுக்கு இந்திப்பேர வச்சாலும் வலைத்தளத்திலே பேரோட அர்த்தத்தைப் பாத்து தெர்ஞ்சிட்டு தான் பேரு வைப்பேன்.

சரி மந்தீப்ன்னா என்ன?

மந்தீப்ன்னா மன ஒளி -ன்னு அர்த்தம் . சந்தீப்ன்னா ஒளிரும் ஒழுக்கம் -ன்னு அர்த்தம்.

எழுதியவர் : மலர் (15-Aug-15, 1:40 am)
பார்வை : 77

சிறந்த நகைச்சுவைகள்

மேலே