சுகமான ராகம்
காதல் என்பது இளமைப் பருவத்தின்
முதல் அங்கீகாரம்,
மனதைத் தொட்டு விட்ட
இனம் புரியாத ராகம் ,
அந்த ராகத்தின் ஓசைதான்
இதயத்தின் துடிப்பாக
கண்கள் தூங்காது கனவுகள் தாங்காது
என்றும் இல்லாத ஓர் வெற்றிடம்
இதயத்தில் இருப்பது போல்
இது இயற்கையின் நியதி
,
இதை கடந்து எவரும்
இதுவரை வந்ததில்லை
இதயம் என்னும் மாளிகையில்
தொட்டுத் துலங்கும் புனிதமான எண்ணம்
இதைக் காதல் என்கிறோம்,
இது புனிதமான அன்பு
கள்ளமற்ற உள்ளத்தில்
காணுகின்ற முதல் சுகமான எண்ணம்
இதனால் தான் காதல் புனிதமானது ,காதல் சுகமானது ,
ஒவ்வொரு மனித இதயத்தையும்
இந்த எண்ணம் தொட்டு தான், மீட்டுத்தான்,
நெகிழ வைக்கிறது
இது ஒரு சுகமான ராகம்
விலையில்லா இதயம் எனும் வீணையின்
இணையில்லா ராகம் இது ,சுகமான ராகம் ,

