தனிமை

உயிர்பரப்பில் முழுதும் மௌனம்
நிறைந்துவிட,
அதில் ஒற்றை மேகம் அலைகிறது!!
மெல்ல மெல்ல மிதந்து வந்த ஒற்றை
மேகம் என் இதயத்தை மெதுவாய்
உரசுகிறது!!!
உரசலில் எழுந்துவிட்ட மனது
மௌன பரப்பில் பாட்டெழுத
அடம்பிடிக்கும்!!
பாட்டெழுந்த பின் என் நெஞ்சில்
ஒரு மௌன கைதட்டல்
மனம்போடும்!!
பனிவாடை காற்று பூக்களுக்கு
நலம்கேட்கும் நேரத்தில்
தனிமை தான் என் பாட்டுக்கு
விதை போடும்!!
என் நெஞ்சில் மெதுவாய் அது
இசைபாடும்!!
தனிமையின் தத்துவம் புரியா
சப்தங்கள் வெகுதூரம் போக,
தனிமையின் ரகசியத்தை புரியவே
வந்தனவாம் எனை மௌனங்கள்
ஆள!!
இயற்கையின் ரசியத்தை
உடைத்தெரிந்த தனிமை கண்ணீரில்
கவிதைகோலம்!!
கண்டுவந்த தென்றல் எல்லாம்
விண்ணில் ஒரு பால்நிலவில்
ஆடும்!!
மனிதரெல்லாம் ஒதுக்கிவிட்டு
எனை மட்டும் அழைத்து வந்த
தனிமைக்கு,
மனித சப்தம் உடைத்தெரிந்து இயற்கையிலே உனை அழைகிறேன்
பாடகனாய் என் பாட்டுக்கு!!
மனபாரம் எல்லாம் இறக்கி வைத்த
தனிமையே உனை தினமும் அழைகின்றேன்!
உயிர்பரப்பில் ஒரு நொடியேனும்
உன்னை பிரிந்துவிட்டால் தனிமையே !! நடுவாழ்வில்
போகும் என் உயிருக்கு
நீ தான் சான்று!!!
்