மூவர்ண குறும்பாக்கள்

மூவர்ண குறும்பாக்கள்
===================================ருத்ரா

பப்பர்மிட்டாயில் ஆரம்பித்து
இப்போது
69வது பஞ்சு மிட்டாய்.

பார்லிமெண்டின்
பாம்புக்கட்டமும் ஏணிக்கட்டமும் கூட‌
அலங்கார வண்டியில்!

இவர் கை அவர் கழுத்தில்.
அவர் கை இவர் கழுத்தில்.
வந்தே மாதரம் சொல்வோம்!

ஊழலுக்கெதிராய் அதன்
திமிங்கில முதுகில் நின்று
திமிங்கிலம் எதிர்த்து வேட்டை.

மூவர்ணம் என்பது
நான்குவர்ணங்களாலும்
உதிர்ந்து போகாத நம் நம்பிக்கை

சாமியார்களின் தாடி என்ன செய்யும்?
பாரதியின்
முறுக்கிய மீசை நம்மிடம் உண்டு.

தமிழ் தீவு அல்ல.
தமிழ் தான் தீர்வு.
சுதந்திர வெளிச்சம் சுடர.

கம்பீர சொற்பொழிவு
மூழ்கிப்போய் விட்டது.
அவை முடக்கக்கூச்சல்களில்.

ஆறுதல் நமக்கு.
இன்னமும் ரவீந்த்ரநாத தாகூர் தான்
தேசியகீதம் பாடுகிறார்.

பாகிஸ்தானுக்கு தெரிந்த
ஒரே புன்னகை மொழி
நம் மீது பீரங்கிப்புகை.

நம் தேசப்படத்தில் "வியாபித்து இருப்பது"
இவ்வளவு பெரிய ஓட்டையா?
வியாபம்.

இந்த "குவார்ட்டர் கட்டிங்க்"கை
வைத்துக்கொண்டா
தேர்(தல்) வடம் இழுக்கப்போகிறார்கள்?


==================================================

எழுதியவர் : ருத்ரா (16-Aug-15, 5:40 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 60

மேலே