மழைலை ஜனிக்க பெண்ணின் குமுறல்

கலியாணமாகி இன்னும் குழந்தை வரம்
கிடைக்கவில்லை
கண்டவரெல்லாம் மனதுக்குள்
முணுமுணுக்கின்றார்கள்
மலடி யென்று
தங்கையின் பிள்ளைகளை
புதினங்களுக்கு கூட்டிப் போனால்
உன் பிள்ளையா? என்று வினாவ
மெதுவாய் இறந்து விடுகின்றேன்
கோயில்குளம் போகும்
போதெல்லாம்
நேர்த்தி கடனும் ,
கல்லும் வைத்து விடுகின்றேன்
உடல் நலம் குன்றிப்
போய்க்கிடக்கும்
எனது கணவர் குணமடைய வேண்டுமென்று...