உனக்கான என் தேடல்

நீண்டதொரு நடு இரவில் ரயில் போகும் ஓசையில்
உன் மௌனத்தை தேட தொடங்கிவிட்டேன்...
அதன் புகைப்படலத்தில் உன் சுவாசம்
தேடித்தோற்கிறேன்...
கடக்கின்ற நிமிடங்களில் உனக்கென
கழித்த என் நொடிகளை தேடி போராடுகிறேன் ...
முடிவற்ற தேடலின் ஒரு கணத்தில்
என்னையே தொலைத்து
பின் உனக்காக எனை தேடுகிறேன்....
உன் நியாபகங்கள் அடங்கிய என் மனப்பெட்டகத்தை
என் செய்து தெடுவனோ?
ஓ என் ஜீவனே தேடலின் முடிவில் நீ இருப்பாய் என்றால்
உனக்கான என் தேடலில் மூழ்கிவிட துணிகிறேன்

எழுதியவர் : சத்யாதுரை (17-Aug-15, 9:12 pm)
Tanglish : unakkaana en thedal
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே