போக்குவரத்தும் போலீசும்
“போக்குவரத்து ஸ்த்தம்பித்துப் போச்சி
போலீஸ் கெடுபிடி ஜாஸ்த்தி ஆச்சி
கார்பொரேஷன் தோண்டிய பள்ளம்
காவு வாங்க காரணமாச்சி..!”
எல்லைக் கோடு வரைந்திருந்தும்
எல்லைத்தாண்டும் பழக்கம் மட்டும்
நம்மில் பலருக்கு மாறவில்லை
நமக்கு நாமே கொடுத்தோம் விலை
கிரீன் சிக்கனல் விழும் முன்னே
சீறீப்பாயும் சில வாகனங்கள்
பாதசாரிகளை பல தடவை
பரலோகம் அனுப்பி விடுகிறது
கைப்பேசி பேசிக்கொண்டு
ஹய்ஸீபீடில் ஓட்டிக்கொண்டு
ரன்வேயை மீறீயதால்
ரத்தக்களரிக்கு ஆளானோம்
தலைக்கவசம் அணிவதற்கு
சோம்பேரித்தனம் எதற்கு..?
ஆஸ்ப்பத்தரி போவதற்கு
அனாவசிய செலவெதற்கு..!
சேப்ட்டி பெல்ட்டுப் போடாமல்
டிரைவிங் செய்கிறோம் கூசாமல்
ஏர் பலூன் எத்தனை தடவை
நம்மை பாதுகாக்கும் நோகாமல்
கால்கடுக்க நின்றிருக்கும்
கான்ஸ்ட்டபிள்களின் சேவைக்கு
மனிதாபிமானம் இருப்போரெல்லாம்
செவிசாய்க்க வேண்டும் அவர் சைகைக்கு..
பிரதம மந்திரி வந்தாலும்
முதல் மந்திரி போனாலும்
சாலை நெடுக காவல் காக்கும்
காவல்துறைக்கு கடும் சவாலாம்
ஜாதி சண்டை நீண்டாலும்
மத சண்டை மூண்டாலும்
சிக்கலை தீர்ப்பதற்குள்
திக்குமுக்காடிடும் போலீஸார் !
நோ பார்க்கிங் போர்டுக்கு
ரெஸ்ப்பான்ஸ் பண்ணாத வண்டிக்கு
ஃபைன்ப் போடும் போலீஸே
போலீஸ் வண்டிக்கும் ஃபைன் போடு…!
சத்தம் போடும் காவல்துறை
சட்டத்தை சட்டை செய்வதில்லை
ஒன்வேய்ன்னு போர்டு போட்டு
ரோந்துப்போகுது ஓவர் டேக்கு..!
இலஞ்சம் என்பது எங்கு இல்லை
இந்திய தேசமே லஞ்சத்தின் பிள்ளை
மாமூல் வாங்குவதில் போலீசும்
மற்றவர்களுக்கு குறைந்தவரில்லை..