காலை உணவாக இட்லி

அரிசியும் உளுத்தம் பருப்பும் கலந்தே
அரைத்து நொதித்து வேகவைத்துச் சாப்பிடு!
உடல்வலிமை அதிகமாக்கும் இட்லியே காலை
உண்வாக்கு! நாள்முழுதும் வலிமைசுறு சுறுப்புண்டே! 1

இட்லியில் கார்போ ஹைட்ரேட், புரோட்டீன்
மட்டின்றி உள்ளது; நார்ச்சத்தும் அதிகம்,
க்ளுட்டன் இல்லை! நொதிப்பதால் புரதம்,
வைட்டமின் ’பி’யளவு மேம்பட்டு இருக்குமே! 2

கொழுப்புகள் இட்லியில் குறைவாம்; அற்ற
கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கும்;
உடலினுள் பாதித்த செல்களை புதுப்பிக்கும்
’லைசின்’ அமினோ அமிலம்மூன் றுமடங்கே! 3

சிறுநீ ரகச்செயல் பாடு மேம்படும்;,
சிறுநீரக ஆரோக் கியமதி கரிக்கும்;
காமா அமினோ பட்ரிக் அமிலம்
ஆமாம் இட்லியில் பத்து மடங்காமே! 4

காலை இட்லி உண்டால், செரிமான
நலமாம் மண்டலத்தி லெளிதில் செரிக்கும்;
செரிமான மண்டலம் சீராய் இயங்கும்.
எடையும் குறையும்; வலிமையும் பெருகுமே! 5

காலையில் இட்லி உண்ண எடையும்
எளிதில் குறையும்; சிட்ரஸ் அமிலம்
நிறைந்த தக்காளி சட்னிவுடல் கொழுப்பைக்
கரைத்து, கார்போ ஹைட்ரேட்டைத் தடுக்குமே! 6

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-15, 8:21 pm)
பார்வை : 205

மேலே