இதுபோதும்

எழுத்துக்கள் எல்லாம் என்னை எடை போட....


எதைப்பற்றியும் கவலையில்லாம் என் கைகள் மெல்ல நடை போட....

என் விழிகள் கண்ணீரில் உறையாட.....

அழகாய் பிறந்தது வார்த்தைகள் பல ஆழமாய் பதிந்த என் காதலைச் சொல்ல.....


உறக்கம் இல்லாமல் உலாவுகிறேன்....

இறக்கம் இல்லாத அவளை நினைத்து....

எங்கோ அவள் குரல் இனிமையாய்....
இங்கோ என் குரல் ஊமையாய்.....


வர்ணித்து வர்ணித்து வார்த்தைகளை தீர்த்து விட்டேன் வலிகளைப் பெற்று விட்டேன்....


வெளிச்சத்திற்கும் வெளிச்சம் என்றேன் அவளை....

வெளிச்சத்தை எல்லாம் திருடிக்கொண்டால் இருளை மட்டும் பரிசாக தந்தால்.....


புன்னகைக்கும் பூக்களை பறித்துச் செல்லும் போதெல்லாம் தெரியாமல் தான் போனது என் புன்னகையும் ஒருநாள் பறிக்கப்படும் என்று....
புண்பட்ட நெஞ்சமானது என் நெஞ்சம்.. இப்போதும் அவளை வர்ணிக்காமால் சொல்வதா என்றே என்னுகிறது.....



அழகுகள் எல்லாம் அடிமை அவளுக்கு....

நானோ அவள் நினைவுக்கு....











!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (21-Aug-15, 4:37 pm)
Tanglish : idhupodhum
பார்வை : 92

மேலே