காதல் என்பது எதுவரை

அழகு தேடிய ஆசை காதல்
இளமை வாட, இருக்குமோ, ஈர்க்குமோ ?

மனம் தொட்டு உணர்ந்த காதல்
குணம் விட, குலையுமோ கூடுமோ ?

செல்வம் சேர்த்த செருக்கு காதல்
அள்ள அள்ள குறையுமோ கூடுமோ ?

ஆன்மா கண்ட ஆளுமை காதல்
நுனி முதல் அடிவரை நீளுமே வாழுமே !

காதல் என்பது ஆன்மா தீட்டும் அரிச்சுவடி அறிவீர் அடைவீர்
அப்படி இருந்தால் தான் அது நிலைக்கும் உங்கள் ஆசைப்படி!

எழுதியவர் : செல்வமணி (21-Aug-15, 10:14 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 142

மேலே