விழி வழியே
விழிகளே ,.
வந்து சேர்ந்து விடு ,
பார்வை தான் என்னில்
தந்து விடு...
இமைகளே,.
மெல்ல சாய்ந்து விடு,
விழி சேர்ந்தவன் விம்பம்
காத்து விடு...
இதழ்களே,.
அவன் பேரை சொல்லு,
இதம் இதயத்தில் மொத்தம்
படர விடு...
இதயமே,.
தினம் காதல் கொள்ளு,
இனி இனிமைகள் உயிர்
உணர விடு...

