மன்னிக்க போவதில்லை

பார் போற்றும் ஒரு
பாரத ரத்னாவை இந்த
பாரதம் இழந்து நிற்கிறது..!!!

இளைஞர் சமுதாயத்தின்
இணையற்ற ஒளிவிளக்கை
இயற்க்கை குளிர்வித்து விட்டது...

விருதுகளுக்கு பெருமை சேர்த்த
விஞ்ஞான வித்தகரை..
விதி பிடுங்கி கொண்டது..

அயராது உழைத்த இந்த
அக்னி சிறகுகள் ..
இறைந்து விட்டன
இந்திய மண்ணில்..

இன்னல்கள் பல கண்டு
இமயங்கள் தொட்ட
இம்மாமேதை இழப்பை
இறைவனாலும் முடியாது
ஈடுசெய்ய..!!!

மரணமே உன்னை
மன்னிக்க போவதில்லை
மனித குலம்..!!
காலம் இன்னொரு
கலாமை தரும் வரை..!!

எழுதியவர் : பிரியங்கா பாண்டியன் (23-Aug-15, 12:03 pm)
பார்வை : 108

மேலே