பிரியங்கா பாண்டியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரியங்கா பாண்டியன் |
இடம் | : T.Puthur,Musiri(tk),Trichy |
பிறந்த தேதி | : 17-Jun-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள் யாவும் ஆரம்ப முயற்சிகளே ..!! rnஇது என் முதல் முயற்சி என்பதால் தவறுகள் இருப்பின் சுட்டி காட்டவும். வாசகர்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவும்..!!
சீதையின் தங்கையாம்
சீண்டிப் பார்கிறான் .
சினத்துக்கொள்வதே இல்லை நான்
இங்கு என்ன இராமாயணமா நடக்கின்றது
தீக்குளித்து நிருபிப்பதற்கு .!
கலியுகம் இதில் கண்ணகிக்கும்
கள்ளக்காதலி பட்டம் தான் .
உச்சி முதல் பாதம் வரை
உடையால் மூடிக்கொண்டால்
இச்சை கொண்டவர் எச்சில் வடிக்காமலா செல்வார்
இஞ்சு இஞ்சாய் அளவெடுத்து
ஏற்ற இரக்கமும் பார்த்து சொல்வார் .
தலை குனிந்து நாம் நடந்தால்
தடவி பார்க்க நினைத்திடுவார்
தலை நிமிர்ந்து நடந்துவிட்டால்
தாவணி சரிவை ரசித்திடுவார் .
சாரியில் தொப்புளும்
சட்டையில் அக்கிலும்
சுடிதாரில் பின்புறமும்
மிடியில் முன்புறமும்
கவர்ச்சி தூக்கும் என்ப
காட்டில் வேலை செய்பவனைக் கேவலமாகவும்
கணினியில் வேலை செய்பவனை உயர்வாகவும்
நினைக்கும் சமூகத்திற்கு தெரியுமா
அரிசியை டவுன்லோடு செய்ய
எந்த ஆப்பும்(App) இல்லையென்று
எதிர்காலச் சந்ததியினர் உண்ண
எந்த ஆப்பும்(சாப்பாடு) இருக்காதென்று
பார் போற்றும் ஒரு
பாரத ரத்னாவை இந்த
பாரதம் இழந்து நிற்கிறது..!!!
இளைஞர் சமுதாயத்தின்
இணையற்ற ஒளிவிளக்கை
இயற்க்கை குளிர்வித்து விட்டது...
விருதுகளுக்கு பெருமை சேர்த்த
விஞ்ஞான வித்தகரை..
விதி பிடுங்கி கொண்டது..
அயராது உழைத்த இந்த
அக்னி சிறகுகள் ..
இறைந்து விட்டன
இந்திய மண்ணில்..
இன்னல்கள் பல கண்டு
இமயங்கள் தொட்ட
இம்மாமேதை இழப்பை
இறைவனாலும் முடியாது
ஈடுசெய்ய..!!!
மரணமே உன்னை
மன்னிக்க போவதில்லை
மனித குலம்..!!
காலம் இன்னொரு
கலாமை தரும் வரை..!!
ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .
அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .
தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?
பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?
பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .
மன்னித்து விடுங்கள் அன
வாழ்க்கை பாதையின் ஒரு
வரலாற்று புத்தகம்..!!
கடமைகளை கடந்து விட்ட
கடைசி வழி பயணம்..!!
ஆணவங்கள் அடங்கி விட்ட
ஆன்மாவின் இறுதி இயக்கம்...!!
மூவுலக அரசனும் தேடுவான்
மூன்று கால் துணையை..!!
மங்கிய விழிகளிலும் பளிச்சிட்டு
பொங்கிடும் பழைய நினைவுகள்..!!!
வாழ்க்கை காவியத்தில்
இயற்க்கை எழுதிவிட தவறாத
இறுதி சாசனம்..!!
உணர்ச்சிகள் உறைந்து விட்டாலும்..,
தாகங்கள் தனிந்து விட்டாலும்..
இளமை வேகம் மட்டும்
இளைக்கா வண்டாய் வட்டமிடும்
இருதய கூட்டிற்குள்...!!!
- பிரியங
வாழ்க்கை பாதையின் ஒரு
வரலாற்று புத்தகம்..!!
கடமைகளை கடந்து விட்ட
கடைசி வழி பயணம்..!!
ஆணவங்கள் அடங்கி விட்ட
ஆன்மாவின் இறுதி இயக்கம்...!!
மூவுலக அரசனும் தேடுவான்
மூன்று கால் துணையை..!!
மங்கிய விழிகளிலும் பளிச்சிட்டு
பொங்கிடும் பழைய நினைவுகள்..!!!
வாழ்க்கை காவியத்தில்
இயற்க்கை எழுதிவிட தவறாத
இறுதி சாசனம்..!!
உணர்ச்சிகள் உறைந்து விட்டாலும்..,
தாகங்கள் தனிந்து விட்டாலும்..
இளமை வேகம் மட்டும்
இளைக்கா வண்டாய் வட்டமிடும்
இருதய கூட்டிற்குள்...!!!
- பிரியங