காற்றோடும் பேசலாமே

சில்லென்ற சாரலில் சன்னல் ஓரம்
சத்தமிடும் காற்றும் காதோரம்
முத்தமிடும் சற்றே தலை சாய்த்தால்
நெஞ்சோரம் ஊறும் ஞாபகங்கள்
தலை கோதும் நேரம் இல்லை
ஞாபகங்கள் நெஞ்சில் ஏற்றி
தலை கோதும் காற்றோடும்
கதை பல பேசிட காலமில்லை
ஒருபோதும் கை கூடாதோ
இனி காலியான காலங்கள்

எழுதியவர் : (23-Aug-15, 1:28 pm)
பார்வை : 174

மேலே