நாவே நாக்கு

" நாவே... (நாக்கு) "
**************************

நாவே நீசுவைப்பாய் அறுசுவை உண்டிதனை
சுவைக்காதே அவலங்கள் இன்றும் எந்நாளும்
கூவமாய்நீ மாறாது பூவகமாய்த் திகழ்வாயே
கேவலமாய்ச் சுழலாது பூபாளம் உதிர்ப்பாயே !

கோவலன் மரித்ததும் காவலன் நாவாலே
கோமகள் நாவாலே எரிந்ததும் மதுரையே
நிவாசோ நவாசோ முகமதுவோ மதுமதியோ
நாவேநீ வாழ்த்து வாழ்த்துச் சொல் இட்டே !

காவடங்கிப் போகும்முன் நாவேநீ நற்சுழன்று
நாதனோ நான்முகனோ அல்லாவோ அருள்மரியோ
நாவேநீ சொல்லு இறைநாமம் என்றென்றும்
நாவடக்கி நாமடங்க நாடெங்கும் ஊர்வலமே !!!
********************

நன்றி என்றென்றும்

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Aug-15, 11:57 pm)
பார்வை : 90

மேலே