தினக் கவிதை

ஆதலால் மானிடரே....
மற்றுமொரு உயர்சொல் கேளீர்.....
எழுபிறப்பு சாத்தியமா
சத்தியமாய் தெரியாது.....
அடுத்த சில ஆண்டுகள்
அதுவும் நிச்சயம் கிடையாது...
இன்றொருநாள் மட்டுமாவது
இம்மியளவு நம்பிக்கை தான்...
எனில்,வாழுங்களேன் நாடு போற்ற...
ஒவ்வொரு வாழும் கணத்திலும்...
நல்ல மனம் கொள்ளுங்கள்.
நலிந்தோர்க்கு உதவுங்கள்.
இயற்க்கை வளம் பேணுங்கள்.
இயலாதோரை தேற்றுங்கள்.
வீண் அறிவை விரட்டுங்கள்.
வெற்றுப் பேச்சை ஒழியுங்கள்.
மனம் ஏதும் புண்படாமல்,
பாங்குடனே பேசுங்கள்.
மற்றவர்கள் தவறு செய்தால்,
மன்னித்து மறந்திடுங்கள்.
எல்லோரிடமும் அன்பு செய்து,
நல்லோராய் இருந்திடுங்கள்.
வானின் மனம் பெற்றிடுங்கள்.
பூமி பொறுமை காத்திடுங்கள்.
வீட்டில் பற்று கொள்ளுங்கள்.
நாட்டை சற்று உயர்த்துங்கள்.
மற்றும் இன்னும் ஒன்றேயொன்று...,,,
தினம் தினம் காலை -
இக்கவிதை படியுங்கள்.