ஒற்றை ஆயுள்

இயந்திரத்தின்
வாயின்
குதப்பலில்!!!
மேனிதிறக்கும்
மொட்டின் சப்தம்..
இரண்டே
மின்கலத்தில்
வறவேற்பறையில்!!!
இறந்து போன
குருவி மொழி..
வயோதிபத்தின்
வாரிசு படுத்திருந்த
திண்ணையில்!!
வற்றிக்கிடக்கும்
குழந்தைக்கான
குட்டி கதைகள்...
மூன்றே வயதில்
கல்வியெனும்
மூளைச்சலவை!
நிலாச்சோற்றில்
காத்திருப்பதேனோ
நிலா!!!
முந்தைய
நூற்றாண்டுகள்
தின்று தீர்க்காமல்
தேன்குவளையில்
மூழ்கிக்கிடக்க!!
இந்த நூற்றாண்டை
எதற்காய்
கிழித்து
குதறினோம்!!
உலகம்!!
தீர்ந்து போகாத
அமுதக்கிண்ணம்....
மோந்து குடிப்போம்
சதைத்துண்டில்
உயிரொழிந்து
கிடக்கும் வரை...
தூர்ந்துபோகாத
பெளர்ணமி
ஒளியில்
படுக்கை செய்வோம்!!
தூரத்தே
எட்டிப்பார்கும்
தென்றலை
விரட்டிப்பிடித்து
விரலிடுக்கில்
சுழுக்கெடுப்போம்!!
மானிட இனமே!!
எழுபதோ எண்பதோ!!
ஆண்டுக்குத்தான்
சதைக்கோர்வை
சாத்தியமாகும்...
உயிர்பிதுங்க
ஓடி உழைத்த
வியர்வையில்
உருக்கொண்ட
மேகத்தை உருக்கி!!
வற்றா நதி திரட்டி
தலைமூழ்கு
தான் எனும்
அகந்தையை!
வாழ்வு
கிட்டாது!
இனியொரு
ஆயுள் வாழ...
ஒற்றை ஆயுள்
ஒழுகி தீரும்
முன்னே!!
நட்சத்திர ஒளி
பிடித்து மின்மினி
தேகத்தில் புகுத்தி
அதன் இறக்கையில்
பறப்போம்!!
உலகு இதுதான்
உணர்ந்த பின்
கவலை மறப்போம்....