அத்தாட்சி முத்திரை

கதவில் தொங்குவது பூட்டல்ல
இரக்கம் அறியா
அரக்கத்தின் மனசு
தெய்வத்தின் வரவுக்கே
கருப்புக்கொடிக் காட்டுவதால்
கோவில் அல்ல இந்த வீடு
பிசாசுகள் வாழும் சுடுகாடு
உலகில் மனிதம்
தொலைந்துவிட்டது
என்பதை அத்தாட்சிப் படுத்தக்
குத்தப்பட்ட முத்திரை
***