புகுந்த வீடு

என்...

மனம் புரியா மாமியாரும்
மதிப்பு புரியா மாமனாரும்
மட்டும் இங்கிருந்தால்
தாங்கிக் கொள்வேன் ஆனால்
காதல் புரியாக் கணவரும்
இங்குதான் இருக்கின்றார்..!!

தினந்தினம்...

கருவிழிக்குள் புதைத்து
வாழ்கின்றேன் என்
கண்ணீர் துளிகளை
கட்டியணைத்து முத்தமிட்டு
புகுந்த வீடு அனுப்பி வைத்த
என் பெற்றோர்களுக்காக..



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (23-Aug-15, 10:24 pm)
Tanglish : pukuntha veedu
பார்வை : 427

மேலே