காதல் தவிப்பு

இரவு கூட தூங்கிடும் - அடர்
இருள் சூழ்ந்த நேரத்தில் -நாம்
இருவர் மட்டும் தவித்திருப்போம்-தினம்
இருவேறு இடங்களில்.

இமைக்குள் முட்கள் இருந்தால்,
உறக்கம் வருமா என்ன...
இதயத்தின் காதல் தவிப்பில்,
தூக்கம் வருமா என்ன...

நீயும் நானும்,
சொல்லாமல் தவிப்பதை பார்த்து,
கைகொட்டி சிரிக்கின்றன,
காதலும்...காரிருளும்....

எழுதியவர் : செந்ஜென் (24-Aug-15, 12:59 am)
Tanglish : kaadhal thavippu
பார்வை : 218

மேலே