தேரோடும் பாதை
உடல் தேர்
மனம் குதிரைகள்
உணர்வுகள் கயிறுகள்
அறிவு சாரதி
கடிவாளத்தை
இழுத்துப் பிடித்து
அறிவெனும் சாரதி
குதிரைகளை நேராக
ஓட்டினால்
தேரோடும் பாதை
வாழ்வெனும் கீதை !
ஆன்மீகத்திற்கு மட்டுமில்லை
அனுபவ வாழ்க்கைக்கும்
அதுவே பாதை அறிவுச் சாரதி !
உணர்வுக் கடிவாளம் தான்இழுத்து நீபிடித்து
மன்க்குதிரை தன்னைநே ராகச் செலுத்து
அறிவெனும் சாரதி தேரோடும் பாதை
அறிவாழ் வெனும்கீதை யாம் !
-----இன்னிசை வெண்பா
உணர்வுக் கடிவாளம் தான்இழுத்து நீபிடித்து
மன்க்குதிரை யைசெலுத்து வாய் ----1
அறிவெனும் சாரதி தேரோடும் பாதை
அறிவாழ் வெனும்கீதை யாம் ---------2
----சிறு மாற்றம் செய்து இரு குறட் பாக்களாக
உணர்வுக் கடிவாளம் தான்இழுத்து நீபிடித்து
மன்க்குதிரை தன்னைநே ராகச் செலுத்து
அறிவெனும் சாரதி தேரோடும் பாதை
அறிவாழ் வெனும் அனுபவக்கீ தையென்றே !
---வெண்பாவில் ஈற்றடி மூன்று சீர்களுடனும் ஈற்றுச் ஓரசைச் சீருடனும்
அமைய வேண்டும் என்பது தூய வெண்பா விதி.
இது எல்லா அடிகளிலும் நாலு சீர் பெற்று வரும் நிலை மண்டில ஆசிரியப்பா
-----கவின் சாரலன்