நானும் இவனே - தேன்மொழியன்

நானும் இவனே
~~~~~~~~~~~~~~~

அறம் அழித்த அவளிடமும்
சினம் நுழையா நொடியுண்டு...

வீரம் விதைக்கும் அவனிடமும்
பிணம் கோதிய விரலுண்டு ...

அவனை அவள் வென்றாலும்
அவளை அவன் கொன்றாலும்

அடுத்த நொடியில்
இவனது விழிகள்
இன்பத்தில் சிலைகள் ...

- தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார்) (25-Aug-15, 3:00 pm)
பார்வை : 351

மேலே