காதல் சாரல்கள் - 5

உன் விழி அம்புகள் வீசி,
என்னில் பலத்த காயங்கள் தான்...
அத்தனை வலிகளும் பொறுத்து - உயிரை,
கைபிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....
வேறொன்றும் இல்லை...
மேலும் பல காயங்கள் வேண்டும்.....
--------------------------------------------------
உன் செவ்விதழ் உதட்டை நோக்கி,
என் கருவண்டு கண்கள் - சுற்றிச் சுற்றி
வருகிறது ஆனந்தமாய்.....
பூவும் புன்னகைக்கிறது.....
------------------------------------------------
நான் சிறு தவறுகள் செய்து,
நீ ஊடலாய் இருக்கும் போது,
"கோபமா" எனக் கேட்பேன்.
"ஆமாம்" எனச் சொல்லிவிட்டு,
வெடுக்கென திரும்பிச் செல்வாய்...
உன் இடை "இல்லை.. இல்லை"
என்று, உண்மையை சொல்வது அறியாமல்...
----------------------------------------------------

உன் தேகமெங்கும் படர்கிறது,
பாழாய் போன தென்றல் காற்று.
கூந்தலை சரி செய்கிறாய்...
முகத்தை சரி செய்கிறாய்...
உடையை சரி செய்கிறாய்...

என்னில் மட்டும் தவறு செய்கிறாய்.
-----------------------------------------------------
நீ வருகிறாய்...
அருகில் அமர்கிறாய்..
நீ பேசுகிறாய்...
நீ சிரிக்கிறாய்....
நீ வெட்கப்படுகிறாய்...
நீ கோபம் கொள்கிறாய்...
நீ கேள்வி கேட்கிறாய்...
நீ விரல் தொடுகிறாய்...
திரும்பிச் செல்கிறாய்.

நான் காதலை தவிர
வேறொன்றும் செய்யவில்லை.....
------------------------------------------------

எழுதியவர் : செந்ஜென் (26-Aug-15, 1:02 am)
பார்வை : 90

மேலே