தூண்டல் துளிகள்
நீரோடை ஒரு கவிதை
சலனங்கள் தாளம்
நீரோட்டம் சங்கீதம்
நம் நெஞ்சம் அரங்கேறும்
இசை மேடை !
------தூண்டல் உமையின் கவிதை
மழை தரும் சங்கீதம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புரட்டும் புத்தகம் நீ
புன்னகை பூவும் நீ
பூவுள் தேனும நீ
தேனின் சுவையும் நீ
தென்றல் கவிதை நீ
கவிதைப் பொருளும் நீ
கவிதை அருளும் நீ !
----தூண்டல் அரவிந்த்தின் கவிதை
ஆதியும் அந்தமும் நீயே
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அவை நிற்கும் சிலை
நீ நடக்கும் சிலை
உனக்காக ஆலய வாசலில்
தவமிருக்கும் நான்
காதல் சிலை !
------தூண்டல் கலா ரசிகன் கவிதை
காதலின் துளிகள் 21
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நிலவுடன் உரையாடி
நினைவுகளில் நீராடி
கற்பனையில் பறந்தோடி
கவிதையில் நடம் ஆடி
எழுதிய அடி
அருமைதானடி
சொல்வாய் நிலவே நீயடி !
தூண்டல் பழனி குமார் கவிதை
நிலவுடன் ஓர் உரையாடல்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
------கவின் சாரலன்
வெண்பாவிலும் தர முயல்கிறேன்