மீண்டும் கிடைக்க பெறாத சந்தோஷம்
பழைய சோறும் அமுதமாகும்
அன்னையின் கை படகையில்
கிழிந்த துணியும் புத்தாடைத்தான்
அதை தந்தை உடுத்தி விடும் போது
நல்ல தோழியாக வலம் வருவாள்
துரத்திவிடும் பள்ளிகுடத்திர்க்கு
துக்கி கொண்டு சென்று
மிட்டாயை வாயில் கடித்து
பகிர்ந்து உண்ணும்
உழை சிந்திய நண்பனும்
சோத்துக்குள் முட்டையை மறைத்து
இன்னொரு முட்டை வாங்க செல்கையில்
மாட்டி கொண்டு அடிவாங்கி
அழுத பொழுதில்
கண்ணீரை துடைத்து விட்டு
அவள் முட்டையை எனக்கு கொடுத்து
சிரித்த தங்கையும்
சீறி பாயும் சிறுநீரை
ஓடையை வெட்டி
ஓடவிட்டு
எனதுதான் தூரம்
இல்லை எனதுதான் தூரம்
என தென்னம் தோப்பு மேட்டில்
போட்டி வைத்து கொண்ட காலங்களும்
ஆலமர ஊஞ்சலில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டு
அனாந்து பார்க்கையில்
வேகமாய் மரத்தில் ஓடும் சாரை பாம்பை பார்த்து
ஓட்டம் பிடிக்கையில்
கிழே விழுந்து காயம் பட்டு
இரவு முழுவதும் அன்னையை தூங்க விடாமல்
திட்டு வாங்கிய இரவுகளும்
பெல் அடித்தாலே
சிட்டென்று பறந்து சென்று
சிட்டு குருவியை பிடித்த பொழுதுகளும்
விடியும் முன்னே
குயில் மரத்தட்டில்
நாவல் பழத்தை பெருக்க
இந்த வட்டம் முழுவதும் எனது
என பட்டா போட்டு கொண்டு
சண்டை போட்டு கொண்ட அதிகாலை விடியலும்
ஊரில் தேர் இழுக்கும் திருவிழாவில்
ஒரு உண்டியலும்
ஒரு காரும் வாங்க
தினம் தினம் வேப்ப மரத்தடியில்
வேப்பம் கோட்டையை பெருக்கி
வந்த காசை
யாருக்கும் தெரியாமல்
வீட்டு ஓலையில் சொருகி
ஒருபா நோட்டை கரையான் தின்னதால்
கத்தி கத்தி அழுத நிமிடங்களும்
தேர்வுக்கு பயந்து
பள்ளிகூடத்தை கட்டு அடித்து விட்டு
காட்டு அடிவாரத்தில் ஓடும் ஆற்றில்
மூல்கி மீன் பிடித்த பொழுது
கல்லில் கை மாட்டி மூச்சுக்கு திணறி போது
ஆர்பரித்து வந்த ஆர்ருயிர் நண்பன்
கல்லோடு சேர்த்து கையை இழுத்து
ஆற்றங்கரையில் துக்கி போட்டு மூச்சு கொடுத் நண்பன்
தோன்று கின்றான் தினம்தோறும்
காயாத வடுக்கள் கையில் பார்க்கும் போது ..,
காசு இல்லாமல்
கிழிந்த ஆடை உடுத்தி சென்ற
காலத்தில் கிடைத்த சந்தோஷம்
காசு இருந்தும்
சந்தோஷத்தை வாங்க முடியாமல்
கணினியின் முன்னே கண் விழித்த படி
காலங்கள் கடந்து செல்கிறது
கடந்து செல்ல விருப்பம் இல்லாமல் ..