நட்பு வினவியது திருமணமானால் என்ன

தோழனின் மனைவியும்
தோழியின் கணவனும்
தோழன் தோழி
நடுவில் இருக்கும்
நட்பை புரிந்து
நம்பிக்கை கொண்டால்
அதுவே திருமணத்திற்கு பின்
தொடரும் நட்பின் சிறந்த வெற்றி


காந்த ரயில் செல்லும்போது
சக்கரத்திற்கும் தண்டவாளத்திற்கும்
நடுவில் இருக்கும்
மெல்லிய இடைவெளி போல்
நட்பை பராமரித்தால்
திருமணத்திற்கு பின்னும்
ஆண் பெண் நட்பு
ஆரோக்கியமாய் தொடரும்
என்பதில் எந்த ஐயமும் இல்லை

அண்ணன் தங்கை மீது கொள்வது
பாசம் என்றால்
தோழன் தோழி மீது கொள்வதும்
பாசமே
இல்லை எனில் அங்கு தோன்றுவது
களங்கமே
அந்த முறிவில் கலங்கி நிற்பது
தோழனோ தோழியோ அல்ல
அவர்கள் நடுவில் உறவில் அடையாளமாய்
இருந்த நட்பே

திருமணம் ஆனால் என்ன
எங்கள் சந்ததியே ஆஹா!!!
என்று வியக்கும் அளவுக்கு
எங்கள் நட்பு என்றும் வாடாமல்
மனம் வீசும்

கடைசியாய் நட்பு கூறியது
நற்குணத்தோடு பழகி பார்
ஆண் பெண் இடைவெளி தாண்டி
காதலில் விலாமல்
என்றும் நட்பாய் நிலை நிற்பேன்
வாழும் நாளெல்லாம்

எழுதியவர் : jonesponseelan (26-Aug-15, 4:15 pm)
பார்வை : 152

மேலே