மோகன புன்னகை - 2

மறுநாள் காலை வீட்டு வாசலின் அருகே நடந்து கொண்டிருந்தால் மீரா. அவளுக்கு அவ்வாறு நடப்பது மிகவும் பிடிக்கும். காலையில் சீக்கிரமே எழுந்து விடுவதால் அவளுக்கு அதற்கான நேரம் கிடைத்திருந்தது. அவ்வாறு நடப்பது பழக்கமாய் இருந்தது. அன்றும் ஏதோ பாட்டை தனக்குள் முனகியவள் வாசலின் எதிரே அவன் நிற்பது கண்டு யோசித்தாள். இவன் இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று எண்ணியவள் உற்று நோக்கியபோது அவன் யாருடனோ தனது மொபைல் போனில் பெசிகொண்டிரிகிரன் என்று தெரிந்தது. மீண்டும் அதே புன்னகை அவன் முகத்தில் இப்போது அது வாய் விட்ட சிரிப்பாக மாறியிருந்தது. அவன் அறியாமல் அவனை பார்ப்பதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இருக்க தன் செய்கிறது என்று எண்ணியவள் அந்த புன்னகை அவளை நோக்கி வீசி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணியவள் சே! என்ன இது கிறுக்குத்தனம் என்று அவனை மீண்டும் நோக்கினாள்.
இப்போது அவன் சைக்கிள் இல் கிளம்பி இருந்தான். அவன் வயது பையன்கள் அனைவரும் டூ வீலரில் வரும் பொது இவன் சைக்கிள் இல் எங்கு செல்கிறான் என்று எண்ணியபடி கல்லூரிக்கு கிளம்பினாள். மீண்டும் காலையில் அவன் பேருந்தில்... அன்றும் வழக்கம் போல் கல்லூரி வகுப்பு நன்றாக முடிந்து விட கூடவே சில நட்பு வட்டங்களும் அறிமுகம் ஆயிருந்தன அவளுக்கு. கல்லூரி வாழ்கையின் தொடக்கம் நன்றாகவே அமைய நாட்களும் நீங்கியது. கலையிலும் மாலையிலும் அவன் அறியாவண்ணம் அவனை பார்ப்பது அவளுக்கு பிடித்த செய்கை. அவள் தோழி பிருந்தா அதனை நோட்டமிட்டு கிண்டலடிக்க தொடங்கி இருந்தாள்.
வழக்கம் போல் ஒரு மாலையில் மெதுவாக கார்த்திகாவிடம் மீரா கேட்டாள் " உங்க ஸ்டாப் இல் இருந்து வரங்கள்ல அவங்க நேம் என்ன? "
யாரு? என்றாள் கார்த்திகா.
"மெக் யுனிபாரம்"
"ஒஹ்! அவன் நேம் கிருஷ்ணா. ஏன்?"
"சும்மா கேட்டேன் , எந்த இயர்?"
"நீ விசாரிக்ரத பார்த்த சும்மா கேக்ற மாதிரி தெரியலே"
"ஐயோ நான் சும்மா தான் கேட்டேன். நீங்க வேற"
"அவன் என் ரிலேடிவ் தான். ரொம்ப நல்ல அமைதியானவன். பொண்ணுங்க கூட ரொம்ப பேசமாட்டான். ஆனா உன் மேல எனக்கு டௌட் இருக்கு. அவனை விரும்புரியா என்ன? அப்படிலாம் எதாவது இருந்த மறந்துடு. அவன் லவ் லாம் பண்ணமாட்டான்."
"என்ன அக்கா? இப்படி சொல்லிடீங்க. விசாரிச்சா உடனே லவ் னு சொல்லிடுவீங்கள? அப்படிலாம் இல்ல"
என்று சொல்லியவாறு தான் ஜன்னல் சீட் நோக்கி நகர்ந்தாள். அவள் மனம் பரபரத்தது. என்ன இப்படி சொல்லிவிட்டாள். ஒருத்தரை பற்றி தெரிந்து வைத்திருக்க கூடாதா? அவனை பற்றி விசாரிக்க கூடாதாமே. விசாரிக்கவில்லை. அவளாச்சு. அவனாச்சு. இனி அவன் முகம் பார்க்க கூடாது என்று ஜன்னலின் வழி தலை திருப்பியவள் மீண்டும் அதே புன்னகை கண்டு மனம் மறந்தாள்...
அந்த புன்னகை.... மோகன புன்னகை...

எழுதியவர் : ஸ்ரீதேவி (26-Aug-15, 1:48 pm)
பார்வை : 222

மேலே