காமம்
காமம்
கண்ணை மூடிக்கொள்
காமம்
காதை பொத்திக்கொள்
காமம்
கன்றாவி எனச்சொல்
காமம்
திடிர் கூச்சம்கொள்
காமம்
பேசா மெளமனம்கொள்
காமம்
காட்டாதே மறைத்துக்கொள்
காமம்
ஆபாசமென அர்த்தம்கொள்
இறுதியாய் ஒன்று
நீ நான் நாம்
காமத்திற்கு தான் பிறந்தோம்
என்பதை மறவாதே !
காமம்
கடவுளை காட்டும் கண்
காமம்
கடவுளிடம் சேர்க்கும் பாதை
காமம்
காதல் போன்றது
காமம்
அன்பை போன்றது
காமம்
நட்பை போன்றது
காமம்
குற்றமல்ல குணம்
காமம்
ஆபசமல்ல அவதரிப்பு
காமம்
விரட்டாதே திரும்பி துரத்தும்
காமம்
இயல்பாய் அணுகு
இயல்பாய் பேசு
இயல்பாய் பார்
எந்த ஆபத்தும் இருக்காது
எந்த ஆபசமும் தெரியாது
எந்த அச்சமும் அணுகாது
எந்த கூச்சமும் கூடாது
......
(செந்தில்குமார் ஜெயக்கொடி)

