மணமான ஆணும் அவனுடன் பெண் நட்பும்

"நேற்றைக்கு திவ்யா கொண்டுவந்திருந்த தயிர் வடை மிகவும் ருசி...அத்தனையும் நானே உண்டு விட்டேன்.பதிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அழைத்து சென்றேன்.
இன்றைக்கு நல்ல மழை மீனாவை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டு வந்தேன்...
கண்மணியின் சுடிதார் மிக அழகாக இருந்தது. உனக்கும் அதே போல் வாங்கி வர சொன்னேன்...
தீபா வீட்டில் கொஞ்சம் பணம் பிரச்சனை. காசு குடுத்தேன். இந்த மாதம் கொஞ்சம் சிக்கனம் தேவை...
திவ்யாவிற்கு நல்ல தலைவலி அதனால் நானும் அவளுடன் மருத்துவமனைக்கு சென்றேன் அதன் வர தாமதம்...
நாளை லெக்ஷ்மி குழந்தைக்கு பிறந்தநாள் நல்ல பரிசு வாங்கவேண்டும்...
நேற்று மீனா அண்ணனுக்கு ரத்தம் குடுத்தேன் அல்லவா... அவர் அப்பா இன்று நன்றி சொன்னார்...
ரம்யா கல்யாணத்திற்கு தயாராகிவிட்டாள் போல... நாளை மாலை அவளை அழகு நிலையத்தில் கொண்டு விடவேண்டும்.
அப்பப்பா இந்த பெண்கள் அதனை பேரும் நண்பர்கள் ஆகிவிட்டார்களே தவிர்க்கமுடியாது...."
அத்தனை தோழிகள் கதையும் என் மனைவியிடம் விளம்பி கொண்டிருந்த போது என் மனைவியின் அம்மா கேட்டார் "என்னடி மாப்பிளைக்கு இத்தனை பெண் சகவாசமா? எப்படி சகித்து கொண்டு இருக்கிறாய்?"
என் நா வலுவிழந்து போனது...
"சும்மா இரு அம்மா, அவர்கள் அத்தனை பேரும் இவர் நெருங்கிய நண்பர்கள். நீ ஊரில் இருக்கும்போது எனக்கு ஆறுதல் அவர்கள்.. அவர்கள் எனக்கும் நண்பர்கள்... என் பிரசவ காலத்து ஆலோசகர்கள்... என்றவள்
என்னங்க! நாளைக்கு நானும் அம்மாவும் காலையில் மாமா வீட்டுக்கு போகிறோம்... திவ்யாவிடம் உங்களுக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வர சொல்லி விட்டேன்... சரியா" என்று விடை கேளாது சென்றாள்...
இப்போது என் நா குளிர்ந்திருந்தது.... ஒரு பானை மோர் குடித்தற்போல்...
இருபாலின நட்பிற்கு ஆண் பெண் பேதமே தெரியாத போது மனம் ஆனா ஆகாத வேறுபாடு என்ன செய்துவிடும்...
பார்வையும் சிந்தனையும் பார்ப்பார்கள் கண்ணிலே....
காமமும் காதலும் அவர்கள் எண்ணத்திலே...
ரத்த சொந்தங்கள் இல்லாத இடத்திலே நட்பு சொந்தங்கள் வந்து விடுகின்றன...
மனைவி உயிர் தோழி உறவு....
கண்ணியம் கொண்டவனுக்கு அந்த வேறுபாடு தெரியும்.
களங்கம் கொண்டவனுக்கு அது புரிவதில்லை....
தோழி என உறவு கூறிக்கொண்டு அவள் அறியாமல் காம பார்வை மேய்பவனுக்கு அவள் சக மனுஷியை கூட தெரிவதில்லை...
அன்பு வேண்டும் அது அந்தரங்கம் தாண்டாமல்...
மனைவி உயிர் தோழி உறவு...

எழுதியவர் : ஸ்ரீதேவி (26-Aug-15, 2:59 pm)
பார்வை : 159

மேலே