சங்கே நீ முழங்கு

விழுந்த விதையெல்லாம்
மண்ணோடு புதைந்தாலும்,
முந்தி வரும் ஒரு விதை
அது இம் மண்ணை வென்று வரும்
என்று சங்கே நீ முழங்கு..!

இம் மண்ணிலே பிறந்ததால்
மனிதனாகிவிட்டேன்..
மனிதனாக பிறந்ததால்
மானம் கொண்டுவிட்டேன்..
மானம் கொண்ட எவரும்
மண்ணோடு புதைந்ததில்லை
என்று சங்கே நீ முழங்கு..!

தாயும் நாடும் ஒன்றென்று
பாலூட்டி வளர்த்தது அவளென்று
அவளும் கொண்டுள்ளாள் கற்பு
அதை போற்றிக் காப்பதே சிறப்பென்று
சங்கே நீ முழங்கு..!

தெய்வங்கள் மண்ணில் பிறப்பதில்லை
பிறப்பது உண்டு மழழை செண்டு..!
தெய்வங்கள் மழழைகள் வேறில்லை
இருவரும் தீமைகள் நினைப்பதில்லை..!
கேட்கட்டும் மழழைச் சிரிப்பெங்கும்
நாடே கோவிலாக விடியட்டும்..
என்று சங்கே நீ முழங்கு..!

உயிர்கள் உயிர் கொள்வது ஒரே முறை
அதில் என்றும் வேண்டாம் குறை நிறை..
உயிர்கள் அனைத்தும் ஒன்றாம்
அதை மதித்து வாழ்வது நன்றாம்..
தாழ்வு பகைமை காண்போர்க்கு
இடமில்லை இனிமேல் மண் மீது
என்று சங்கே நீ முழங்கு..!

இவை அனைத்தும் அமலாக்க ஒரு சட்டம்
இயற்றிட வேண்டும் ஒரு நித்தம்..
ஒதுங்கி நின்றது போதும்
கடத்த இனி இல்லை நேரம்..
பொங்கி வரட்டும் நேசப்படை
இந்த நாட்டை காக்கும் சுவாசப்படை..!
முடிவொன்று நெருங்கிவிட்டது
குள்ள நரிகளுக்கு..
இந்த நாட்டை கறையாக்கும்
பணப் பேய்களுக்கு..
என்று சங்கே நீ முழங்கு..!

கண்ட கனவெல்லாம் பலித்துவிட்டால்
இதைவிட வேறில்லை சொர்கம் இங்கு..
அகிலத்தையே அளப்போம் மூவர்ணத்தால் அன்று
என்று சங்கே நீ முழங்கு..!

- பாரதி

எழுதியவர் : விஜயபாரதி (31-Aug-15, 1:15 pm)
Tanglish : sange nee mulanggu
பார்வை : 1071

மேலே