வீழ்வது குற்றமல்ல
வீழ்வது தவரல்ல..
ஆனால்..
எழ மறுப்பது குற்றம்..!
வீழ்ந்தவன் வீரனாவது
ஆச்சரியம் அல்ல..!
வெற்றியில் களிப்பு
கொள்ளாதிருக்கலாம்..
ஆனால் தோல்வியில்
களைப்பு கொண்டு விடக்கூடாது..!
வெற்றி கொண்டவன் மட்டுமே
வாழ்வான் எனில்
வெற்றி என்பதே வாழ்வில் இராது..!
வெற்றி பெற்றதால்
வாழ்விர்க்கு மதிப்பு கூடலாம்..
ஆனால் தோல்வி இருந்தால் மட்டுமே
வெற்றிக்கு மதிப்பு சேரும்..!
பெண்ணாக பிறப்பது சிறப்பு..
ஆனால் உயிர் கொடுப்பதால் தான்
பெண் என்பவள் சிறப்பு..!
என் வாழ்வின் அனைத்துமே
வெற்றி தான் என்று ஒருவன்
சொல்வான் எனில்..
அவன் இருளில் நின்று
இந்த உலகமே என் நிழலாக
உள்ளது என்பவன்..!
நான் வெற்றிக்கொண்டேன் என்றால்
நான் நிச்சயம் தோல்வியை
ருசித்திருக்கவேண்டும்..
ஆம்..
தின்றவனுக்கு மட்டுமே
தெரியும்
நெல்லிக்கனியின் இனிப்பு..!
தோல்வியை வெற்றி கண்டவன்
வாழ்வை வெற்றி கொள்வான்..
தோல்வியை வெற்றி கொள்வது
எளிது..!
தோல்வியை தோழனாக
ஏற்றுக்கொள்..!
வெற்றி பெறுவாய்..!
ஆஹா.. வென்று விட்டேன்..!
வாழ்வை வென்று விட்டேன்..!
என்று கூப்பாடு வேண்டாம்..
சற்று பொறு..
வெற்றி என்பது ஒரு போராட்டத்தின்
முடிவு மட்டுமல்ல..
மற்றொந்றின் தொடக்கமும் கூட..!
வீழ்வது தவரல்ல..
எழ மறுப்பது குற்றம்..!
வீறு கொண்டு ஏழு..
ஏறு போல் நட..!
- பாரதி