என்ன ஆச்சு பொண்ணு போச்சு மூச்சு பேச்சு நின்னு போச்சு,

பாத்த மொத நா
தோத்து போன தா
என்ன ஆச்சு பொண்ணு போச்சு
மூச்சு பேச்சு நின்னு போச்சு

சிறுபிள்ளை ஆனேன் நே
நடுரோட்டில் புரண்டேன் நே
உன் சுவாசம் பட்டதால் என் மேலே

என்ன ஆச்சு பொண்ணு போச்சு
மூச்சு பேச்சு நின்னு போச்சு

நிலா முட்டும் நெஞ்சம் அவள்
விழா கூட்டம் உள்ளே அவள்
கண்ணை மறைக்கும் காதல் அவள்
உள்ளே உயர உயரமாய்
வளரும் மூங்கில் தோட்டம் அவள்

காதல் மொட்டு மட்டும்
விண்ணை முட்டும்
வெண்நிலவில் பனி துளியாய்
நானும் அவளும் மட்டும் மட்டும்

தேனிலவாய் தேய்ந்தோமே
தேக உணர்வாய் உராய்ந்தோமே
வெண் நிலவின் ஒளியில்
குளிர் காய்ந்தோமே

காதல் கனவில் மூழ்கி
தீர்ந்தோமே

செல் பேசி செல்பேசி
காதலை பெற்றேனே
முன் பேசி முன் பேசி
கவிதையை வார்த்தேனே
காதலை நெஞ்சில் சுமந்தேனே

உன்ன பாத்த மொத நா
பொழச்சு கிட்டன் தா
என்ன ஆச்சு என்ன ஆச்சு
கண்ணு கண்ணு முட்டி போச்சு

பாத்த மொத நா
தோத்து போன தா
என்ன ஆச்சு என்ன ஆச்சு

என்ன என்னமோ ஆச்சு

எழுதியவர் : கிருஷ்ணா புத்திரன் (1-Sep-15, 5:30 pm)
பார்வை : 95

மேலே