நீ அதுவாய் இருத்தல் நலம்

எவராய் மாறினும் பயனில்லை,
நீ நீயாய் இருத்தல் நலம்!

எவர்ச் சொல் கேட்பினும் பயனில்லை,
நீ சுயமாய் இருத்தல் நலம்!

சுகமாய் வாழ்வது நிலையில்லை,
நீ சுடராய் எரிவது நலம்!

செல்வம் சூழ்ந்தால் வளமில்லை,
நீ அன்பைச் சேர்த்தல் நலம்!

உனக்கு மேலும் கீழும் எவருமில்லை,
நீ சமனாய் மதித்தல் நலம்!

அன்பை மிஞ்சும் எதுவுமில்லை,
நீ அதுவாய் இருத்தல் நலம்!

எழுதியவர் : பெருமாள் (1-Sep-15, 4:59 pm)
பார்வை : 365

மேலே