அந்தரங்க பதிவாக்களை தடுப்பது யார்

வழிபோக்கில் மிருகங்கள் உடலுறவு கொள்ளும் போது வெட்கத்தில் தலைகுனியும் பெண்கள் இருக்கின்ற போதும்.
மிருகங்கள் கூட நாகரியம் அடைந்து விட்டது வெளியிடங்களில் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை
ஐந்தறிவு மிருகங்கள் கூட அது அநாகரியம் என்று தவிர்த்துவிட்டது
இந்த ஆறறிவு படைத்த மனிதனின் ஈனச்செயல்கள் நாம் தினம் தினம் செய்திகள் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம் ,

தான் உடலை நிர்வானப்படுத்தி தம் தாம்பத்திய உறவை ஒளிப்படமாக்கி ரசிக்கும் மாந்தர்கள் (மந்தை)இந்த மிருகங்களை விட எவ்வளவோ கோவலமானவர்கள்.
எத்தனை தவறுகளை மூடி மறைப்பது மூடியிருந்த மானத்தை யார் திறந்து விட்டது
கலையை வளர்த்துக்கொள்வதற்காக
சேலையை தளர்த்த வேண்டாம்
கலை பண்பாட்டை காப்பாற்ற உயிர் விட்டார்களே இதற்காகவா ?
இன்னும் இன்னும் எத்தனை அவமானங்களை தரப்போகின்றீர்களோ? தெரிய வில்லை

கரம் கூப்பி அன்பான வேண்டுகோள் !
உடல் காட்டி பிழைக்கும் பிழைப்பை நிறுத்து விடுங்கள்
இப்படி பட்ட ஒளிப்படங்கள் ,புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள் .இது ஒரு கலையல்ல எம்முடைய முன்னோர்கள் கட்டிக்காத்த கலைகளை அழிக்கும் ஈனச்செயல்
பருவம் ,பக்குவம் ஆனதிலிருந்து தன்னை பெற்ற தாயிடம் கூட காட்டாத உடலை யாரோ ஒருவன் தன்னை நேசிக்கின்றான் என்பதற்காக காட்டுகின்றீர்களே!எவ்வளவு அநாகரியம் என்று அறியவில்லையா?
காதலிக்கும் காதலன் உன் உடலை நிர்வாணமாக பார்க்க வற்புறுத்தினால் அவன் உன்னைக்காலிக்கவில்லை என்று தூக்கிப்போடுங்கள்.திருமணமானதும் அந்த பூவுடலை மணாளனுக்கு கட்டுக்கங்கள் அது தவறில்லை.அதையே காணொளிப்பதிவாக்க கணவன் விரும்பினால் அனுமதியாதீர்கள் பெண்கள் நீங்கள் தான் உங்களை காத்துக்கொள்ள வேண்டும் .அப்படியான மந்தைபுத்தி உடையவர்களை இது தவறு என்று முடிவாக சொலுங்கள்.

இப்போது பெண்களே தன்னுடலை அந்தரங்கமாக்கி ரசிக்கிறார்கள்
இப்படியான ஒரு ரசனை ஒரு ரசனையா அப்படி இருந்தால் நிலைக்கண்ணாடியில் நின்று கும்மாளம் அடியுங்கள் அது யாரிடமும் சொல்லப்போவதுமில்லை, பதிவேடுப்பதுமில்லை

சிறு வயதில் காட்சட்டையின் சிப் திறந்து கிடந்தது அவமானப்பட்டாலே தற்கொலைக்கு முடிவு செய்யத்தூண்டும் மனது உயிரை விட மானமே பெரிது என்ற வைராக்கியம் அது இன்றைய சில பெண்கள் திறந்து காட்டி மறந்து விடுகின்றார்கள்
ஆட்டம் போடஆரம்பித்து விட்டல் நட்டமாவது நீங்கள் மட்டுமில்லை எங்களுடைய பண்பாடுகளும் ஆட்டம் கண்டு விடுகின்றது
ஆங்கிலேயர்களிடமிருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்தரங்க பகிர்தல் அன்னைத்தமிழுக்குள் நுழைந்து விட்டது மிகவும் பாதுகாப்பாக இருந்த ஈழமண்ணிலும் பரவத்தொடங்குகின்றது இதை தடுப்பது யார்?வினாவுடனே விக்கித்தவிக்கின்றது எம்மினமின்று

உரிமையுள்ள அன்பான தமிழ் உறவுகளே!!
இப்படி தரம் குறைவான ஆசைகளை களையுங்கள்
அப்படி இருந்தால் இல்லாது ஒழியுங்கள்
ஊடகங்களே இப்படியான காணொளிகளை பிரசுரிக்காதீர்கள்
பலிவாங்களுக்காக இம் இனம் மானத்தை வாங்காதீர்கள்
தனிப்பட்ட முறையில் சீர் திருத்த முயலுங்கள் இல்லையெனில் இப்படியானவர்களுக்கு மன்னிப்பே வழங்காமல் தண்டைனை கொடுத்து விடுங்கள் .......
என்னையும் மன்னியுங்கள் இப்படியான கிழ்த்தரமான நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி தகவல் பகிர்ந்தமைக்கு ..

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (1-Sep-15, 7:11 pm)
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே