கால விதி யால் காலாவதி ஆகிடுமா காதல்💘

நட்பே..!
பழகியது சிலகாலம்
பாசமது பாரளவு!
பதிந்துவிட்டாய் எனக்குள்ளே
பாசமது மாறாது!
********💝
கல்லூரிக் காலத்தில்
கணப்பொழுதும் பிரியாமல்
கண்ணோடு இமை போல
கனிவாய் என்னோடிருந்தாய்!!
********💑
காலங்கள் உருண்டோட
காதலெனும் பூ கொண்டு
காலமெல்லாம் என்னோடு
கடைசி வரை வாழ்வேனென்றாய்!!💏
********
காதல் வேண்டாம்
காயம் என்றேன்!!
காயம் அல்ல காதல்
காலம் உணர்த்தும் என்றாய்!!💇
********
கற்போடு நட்பை
களங்கமின்றி காத்தவனே
கடைசிவரை என்னையும்
கலங்காமல் காப்பாய் என!!💘
********
உன் அன்பின் ஆழத்தில்
உனக்கே உயிரான நொடி
உணர்த்தியது என் உள்ளம்
உனக்குள் நான் என!!💚
********
கன்னியிவள் மனதுக்குள்
களிப்போ பலகோடி
கணவனாய் உயிர்நண்பன்
காலமெல்லாம் வசந்தம் என்றேன்!!💑
********
இப்படி எனக்குள் வந்து
இறுதிவரை இருப்பேன் என
இன்முகம் மலர்ந்தவனே - இன்று
இடியாய் விதி உரைத்ததும் ஏன்??👄
********
அன்பில் ஆதாரமாகி
அரவணைப்பில் தவழ்ந்து
நம்பிக்"கை" சேர்த்தவனே
நழுவிச் செல்வதும் ஏன்??🏃
********
"விதி இருந்தால் சேர்வோம்" என
விடைபெற்று செல்பவனே
விதித்த உன்கட்டளையால் -வலியில்
விம்மி அழும் இதயம் பார்!!💔
********
விதியிலும் வலியது காதல்
விரும்பிய உயிர் விலகினாலும்
விழியோரம் கண்ணீராய் மாறி
உன் கரம் பற்ற காத்திருக்கும்..!!!!!💚👫
********** ®®®®®®***********

எழுதியவர் : Ran Joo (2-Sep-15, 1:42 pm)
பார்வை : 131

மேலே