பெரியவா லீலா வினோதம்

தலைப் பாகைச் சாமியார்..

பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலிருந்து ஏதாவது
உதவி செய்யணும்.....
ஏழைத் தம்பதிகள்..கழுத்தில் மஞ்சள் சரடு தவிர ஒரு
மெல்ல்ய சங்கிலி..
இவர்களுக்கு உத்வி செய்ய வேண்டியதுதான்..
''நான் ஒரு சன்னியாசி. ஒரு பைசாகூட கையால்
தொட்டதில்லை. என்னிடம் போய் பண உதவி
கேட்கிறாயே!'' என்று வெளிப்படையாகப் பேசிக்
கொண்டிருக்கும்போது, அந்தரங்கத்தில் ஒரு
திட்டம் உருவாகியிருந்தது!

அதே சமயம் காமாக்ஷி கோவிலிலிருந்து தலைமை
ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில்
பெரியவாளுக்கு பரிவட்டம் கட்டினார்..பின்னர்
குங்கும ப்ரசாதம் சமர்ப்பித்தார்.
பெரியவாள் பரிவட்டத்தை கழற்றி, பெண்
கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவருக்குக்
கட்டும்படி உத்தரவிட்டார்கள்.
யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!

பெரியவா குங்கும ப்ரசாதத்தை அவரிடமே
கொடுத்து ''நீயே எல்லாருக்கும் கொடு'' என்றார்.
திமு திமுவ்ன்று மார்வாரிக் கூட்டம் உள்ளே
நுழைந்தது.க்ஷேத்ராடனம்..வாடகை வாகனத்தில்..

பரிவட்டத்துடன் குங்கும ப்ரசாதத்துடன்
உட்கார்ந்திருந்தவர்தாம் ஸ்வாமிகள் என
நினைத்து, காலில் விழுந்து இரு நூறும்
முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள்.
பெரியவா முன்னதாகச் சொல்லியிருந்தபடி
தலைப்பாகை ஆசாமியும் எல்லாருக்கும்
குங்கும ப்ரசாதத்தை இட்டுவிட்டார்.
இந்த லீல நாடகம் முடிந்ததும் ஸ்வாமிகள்
எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி,
ஆசிர்வதித்து, ப்ரசாதமாகப் பழங்களைக்
கொடுத்தார்கள்.
''ஒரு பைசாவைத் தொடாமலேயே பெண்
கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை
தலைப்பாகை சாமியாருக்கு ஏற்பாடு
செய்து விட்டார். பெரியவா லீலா வினோதம்
எண்ணிலடங்காது!

தகவல்..தரிசன அனுபவங்கள் கோதண்ட ராமசர்மா..
ஜய ஜய சங்கரா...

எழுதியவர் : சரஸ்வதி தியாகராஜன் (3-Sep-15, 11:02 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 104

சிறந்த நகைச்சுவைகள்

மேலே