மன்னிக்கிறதா அந்தப் பேச்சுக்கே இடமில்ல
(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)
மனைவி : "வந்துட்டீங்களா... உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"....
கணவன் :"ஏன்? என்னாச்சு"..?
மனைவி : "இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்"...
கணவன் : "சரி"...
மனைவி : "இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் எனக்கு நிம்மதி"..
கணவன் : (கலவரப் பீதியில்...)" நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே" ...
மனைவி : "மன்னிக்கிறதா அந்தப் பேச்சுக்கே இடமில்ல.
எங்க அந்த உருட்டுக்கட்டை".....
(என்று தேடிக் கொண்டே செல்ல...)
.
.
(வாசலிலிருந்து வந்த மகன்)... "அப்பா ...சீக்கிரம் ஓடிடுப்பா"!
அப்பா : "ஏண்டா"..?
மகன் : "நான்தான் கோவத்துல தாத்தாவை திட்டினேன் அப்பா".
அப்பா : "அடப்பாவி மகனே.. வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..!
எங்க போவேன்..!
செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே"....