காதல் கவிதை

கண்ணுக்குள்ள வந்தவளே
கண்ணில் என்னை காத்தவளே
கண்ணிரெண்டில் காதலினை சொன்னக் கிளியே

நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு
நான் நடந்து போகையில
சொர்க்கத்துல நடப்பது போலிருக்குதே ...

அடி மானே மானே உன்னைத் தானே ...
எண்ணி நானும் வாழ்வேன் தினந்தோரும் ...
அடி மானே மானே உன்னைத் தானே ...
எண்ணி நானும் வாழ்வேன் தினந்தோரும் ...

(கண்ணுக்குள்ள வந்தவளே ...)

கண்ண பாத்ததுல பேச தோனவில்லை
நாலும் பாத்து சொக்கிப் போகுறேன் ...
கானும்பொழுது எல்லாம் நீயும் பேசையில
கேட்டு நானும் திக்கிப் போகுறேன் ...

கானாத பார்வையெல்லாம்
நீயுன்தான் பார்த்ததுல நாளும்
தூக்கம் கெட்டுப் போகுது ...
கண்ணால நீயும் பேச
காயங்கள் வற்றிப்போக
நானும் உந்தன் மடி சாயிறேன் ...

காதல் நீயும் தந்ததாலே
எந்தன் வாழ்வில் நானும் பிழைத்தேனே ...

(கண்ணுக்குள்ள வந்தவளே ... )

கண்ணு அழகு கண்ணு
என்ன மயக்குதடி
நானும் பாவம் என்ன செய்வேன் ...

நீயும் சிரிக்கையில
பூக்கள் சிரிப்பு எல்லாம்
ஆச்சு ஆச்சு தவிடாச்சு

பொல்லாத பார்வையில
கொள்ளாத நீயும் என்ன
போதும் போதும் இது போதுமே ...

கண்டாங்கி சேலையில
உன்ன நான் பாக்கையில
கண்ணு இன்னும் கொஞ்சம் கூசுது ...

காதல் நீயும் தந்ததாலே
எந்தன் வாழ்வில் நானும் பிழைத்தேனே ...

(கண்ணுக்குள்ள வந்தவளே ... )

எழுதியவர் : சிவா அலங்காரம் (5-Sep-15, 3:06 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 264

மேலே