முடியும் என்று சொல்லுங்கள்
முடியும் என்று சொல்லுங்கள்
மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
உலகம் தட்டை என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த போது, இல்லை. உலகம் உருண்டை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நிரூபிக்க முடியாது என்று மற்றவர்கள் கூறியதை நிரூபித்துக் காட்டினார் கலிலியோ .
பலரும் இதயம்தான் அனைத்து உடலியக்கங்களையும் செய்கிறது என்று கூறிய போது மூளைதான் அனைத்தையும் செய்கிறது என்று கூறினார் அரிஸ்டாட்டில்.
இவனால் கல்வி கற்க முடியாது. ஏன் வகுப்பில் என்ன நடக்கிறது என்றுகூட கவனிக்க முடியாது என்று கூறியபோதும் 1000க்கும் மேற்பட்ட விஷயங்களை கண்டறிந்து தன்னால் முடியும் என்று காட்டினார் எடிசன்.
மனிதன் பறப்பது என்று சிந்திப்பதுகூட ஆண்டவனுக்கு எதிரான செயல் என்ற பிரசங்கம் செய்து கொண்டிருந்த பாதிரியாரின் மகன்களான ரைட் பிரதர்ஸ், விமானம் கண்டறிந்து காட்டினார்கள்.
கண் தெரியாது. காது கேட்காது. வாய் பேச முடியாது என்ற நிலையிலும் தன் 25 வயதில் சிறந்த கல்வியாளர் என்ற பட்டம் வாங்கிய ஹெலன் கெல்லர் ஒரு சிறந்த உதாரணம். முடியாது என்பதையே தன் பேச்சாக கொண்டிருந்தவர்களுக்கு முடியும் என்பதை மூச்சாக மாற்றிய உதாரணம்.
எனவே, மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப் படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
முடியாது என்று உலகமே சொன்னாலும் முடியும் என்று சொல்லுங்கள் நண்பர்களே.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
