இலட்சியத்தின் மீது பிடிவாதமாக

இலட்சியத்தின் மீது பிடிவாதமாக இருங்கள். வெற்றிகளை இறுகப் பற்றுங்கள்.

நம்மீதான நம்பிக்கை மலைகளைவிட உயர்ந்தது. ஏறுகின்ற போதெல்லாம் மலை நம் காலடியில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்போது நடப்பது? எடுத்து வைக்கின்ற முதல் அடியின் தீவிரத்தில்தான் எதுவும் நடக்கும்.

ஒருவன் ஒரு பெரியவரிடம் போய் சொன்னானாம், ‘எனக்கு வாழ்க்கையே கஷ்டமாக இருக்கு”. அந்தப் பெரியவர் கேட்டார், ”எதனுடன் ஒப்பிடுகையில்?” உண்மைதான். எதனுடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டம் என்று சொல்வது?

நம் எதிர்காலத்தை கண்களில் கனவுகளாக, வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அந்தக் கனவுகள் நம் உணர்வுகளில் கலந்து இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அது உயிர்பெறும். விஸ்வ ரூபமெடுக்கும். நம் குறிக்கோள்களை சென்றடையும்வரை நாம் செவிடர்களாக இருப்பது நல்லது. ஏன் தெரியுமா? 50கள்வரை மருத்துவர்கள் ஒரு கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாத காரியம்.

ஏனெனில், மனிதனின் உடல் ஒத்துழைக்காது. அப்படியே ஓடினாலும் இரத்தம் சூடேறிவிடும். மரணத்தையும்கூட சந்திக்க நேரிடும் என்றார்கள். எல்லோருமே அதை ஆமோதித்தார்கள். கேட்டுக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் இது எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. 1954ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம்தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம் 59.4 வினாடிகளில் கடந்தார். அவர் பெயர் ரோக் ரேனிஸ்டர்

1957இல் மீண்டும் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார், 3.58 நிமிடங்களில். அதற்குப்பின் 4700 முறைஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே கடந்து பலரும் சாதித்தனர். சாதனையை துவக்கிவைத்து, கணிப்புக்களைப் பொய்யாக்கியவர், ரோக் ரேனிஸ்டர். சற்றேசிலிர்ப்புடன் அவர் சொன்ன வாசகம், ‘Dont listen to the voice of Doubts’. சந்தேகத்தின் குரல் நமக்கு பகைவன்தான்.

(நமது நம்பிக்கை மாத இதழில்)

எழுதியவர் : படித்தது (நமது நம்பிக்கை ம (6-Sep-15, 10:55 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

மேலே