அந்த இரவு

உன் அருகில் வந்தால்
என் உடலின் ஒவ்வொரு அணுவும்
உன்னை தொட முயன்று
உஷ்ணத்தை உண்டாக்குகிறது


உன்னை என் உடலின் தோல் மட்டும் தொடுவதால்
எலும்புகளின் போராட்டம்
மஜ்ஜையின் ஊடே தெரிகிறது


நீ கட்டியணைத்த நிமிடம்
உன் உஷ்ணத்தின் ஊடுருவல்
என்னுள் ஏதோ செய்தது


நான் பின்னின்று
உன்னை கட்டியனைத்து
கழுத்தில் இட்ட முத்தத்தில்
மொத்தத்திற்க்கும் இடமளித்தாய்


பெண்ணின் ஆடை கலைவதின்
சூட்சமம் அறியா எனக்கு
அறிய செய்தாய் அன்று


ஆணின் ஆடை களைதல்
அவ்வளவு சிரமமில்லை போலும்
எளிதாய் கலைந்தது


இரு உடல் நிர்வாணமாக
ஏதோ ஒரு கூச்சம்
உனக்கும் எனக்கும்


உன் இரு கைகள்
மார்பின் குறுக்காய்
அவ்விரண்டு முலைகளை மறைக்க


பார்க்கும் ஆர்வம் எனக்கு
கூடவே பயமும்


நான் செய்வதறியாது இருக்க


உன் கண்கள்
என்னை நோக்கி
வெட்கம் பெண்ணின் உடமை
அதை களைதல் ஆணின் கடமை
எனச்சொல்லாமல் சொல்ல

சக்திபெற்றவனாய் கைகள் நீக்க
சற்றே விரைவாய்
கைகள் இருந்த இடத்தில்
என் மார்பை இருக்க செய்தாயே


என்னையறியாமல் என் கை
உன் மெல்லிய இடையை அழுத்த


உன் கண் செருகி
நீ நின்ற போது
முழுதும் என்னை மறந்தேன் நான்


உண்ணும் போது
உதடுகள் எதற்கென
எண்ணியதுண்டு


உன் உதடு உணர்த்தியது இப்போது
ஏனென்று


மற்றவர் எச்சிலிட்ட
பண்டத்தை கூட சுவைக்காத நீ
என் எச்சிலை மட்டும் சுவைத்ததேனோ?


உன் உதட்டால்
உலாவ தொடங்கினாய்
உரோமம் நிறைந்த
என் உடலில்


உஷ்ணம் கொப்பளித்த என் உடல்
உன் உதட்டின் ஈரம் பட்டு துடிக்கிறது


அடிவயிற்றை வருடிய
உன் உதடு
ஒரு கணம் நின்றது


தடுக்க நினைத்தும்
கைகளை இழந்தவனாய் நிற்க


என்னை புரிந்து
உனக்கான எந்தன்
உறுப்பை அடைந்தது உதடு

என் ஒவ்வொரு நரம்பும் முறுக்கேறி
மூளையை என்னென்னமோ செய்ய
கிரங்கிபோனேன்


உன்னை கட்டிலில் கிடத்தி
எந்தன் உதட்டால்
உந்தன் உடலில்
எச்சில் நனையா
இடமில்லாமல் செய்தேன்


தொடங்கியது தொடர்ந்தது
இரவின் பாதி வரை


ஆயிரம் கவலைகள் என்னோடு
ஆயினும் அவை மறந்து
அல்ல
மறைந்து போயின
இப்போது


காம நீர் சுரந்தால் முடியுமோ
இந்த தொடுதல்
அப்படியாயின்
அந்நீர் சுரக்காமல் இருப்பதே மேல்


அந்த காமத்தின் முடிவில்
நான் சிந்திய வெந்நீர் துளிகளை விட
நீ சிந்திய கண்ணீர் துளியில்
தெரிந்தது நம் உறவின் ஆழம்.....

எழுதியவர் : குருமூர்த்தி (6-Sep-15, 5:06 pm)
Tanglish : antha iravu
பார்வை : 1074

மேலே