காதல் சொல்ல வைத்த விழி எங்கே

மூடியிருக்கும்

முகத்தழகே!

ஒளிந்திருக்கும்

விழியிரண்டும்

எனை நோக்க !

வீதியில் பார்த்து

விட்டு செல்வதென்ன

இஸ்லாம் மகளே

என் இதயத்தில்

குடி கொள்ள மாட்டாயா ?

எழுகின்ற இளம் பிறை

ஒளித்திருக்கும் நட்சத்திரம்

என் அருகில்

நீயிருக்க

அவையெல்லாம்

ஆசிர்வதிக்கும்

மதம் பார்க்க

மனம் ஒப்பவில்ல

காதல் சொல்ல

காதல் தந்த விழியை

தேடுகிறேன்!

கோசவுக்குள்

ஒழிந்திருக்கும்

ஒளிச்சிலம்பே

கண் சிமிட்டும்

கவர்ச்சி ஒளியே !

என்னை கவர்ந்த நாயகியே !

திறந்து கட்டு

உன் ஓவியதுரிகையை

கண்டு கொள்ள

உன் கண்கள் போதுமடி

பாச விழியில்

என் காதல் புலர்கிறது

வியந்து கொள்கிறேன்

நபி ஷால் அவர்களின்

சாதனையை .

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (6-Sep-15, 10:40 pm)
பார்வை : 84

மேலே