என் மன கோட்டைக்குள்

இமை தட்டி விழிக்கும் நேரத்திற்குள்
மின்னலாய்
என் இதயத்திற்குள் நுழைந்து
மந்திர சாகசங்கள் நடத்தி
அதே வேகத்தில் வெளியேற நினைக்காதே

அன்பே
அன்பு சங்கிலியால் உன்னை
என் மன கோட்டைக்குள்
கட்டி வைத்து விட்டேன்...

இனி உன்னில் நான்...
என்னில் நான்
மீள்வது கடினம்...

எழுதியவர் : சாந்தி ராஜி (6-Sep-15, 11:08 pm)
Tanglish : en mana Kottaikkul
பார்வை : 40

மேலே