கொலை

கொல்வாள் கொண்டு வெட்டவில்லை
என் உள்ளத்தை துண்டாக்கிவிட்டாய்
கொடும் பாறை நெஞ்சில் தூக்கிப் போடவில்லை
என் மனதை கனக்கச்செய்தாய்
கொண்டல் காற்று வெகுண்டெழவில்லை
புயலாய் என்னை தூக்கி வீசிவிட்டாய்
உயிர் கொல்லுதல் பாவம் என்பதாலே
மனம் கொல்லுதல் சூழ்ச்சியென முன்பே அறிந்தாயோ- அதனால்
உன் காந்தகண் கொண்டு
என் மனதை பிடித்திழுத்தாயோ
ஆசைதான் மதியோனையும்
மூடநாக்குமென்று தொரிந்திருந்தாயோ
கண்ணிரெண்டில் ஆசை கொண்டதாலே
கலக்கமுற்றேன் நெஞ்சில் வேதனையுற்றேன் - ஆனால்
என் மனம் உன்னை நினைந்திருக்கும்
நீ நலமுடன் வாழ!.............

எழுதியவர் : முனைவர் செ.வீர அழகிரி (7-Sep-15, 11:30 am)
Tanglish : kolai
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே