வரதட்சனை
நான் பெண்ணாகி பிறந்தது என் தவறா என்னைப் பெற்றவர்கள் தவறா
இன்று புண்ணாக்கி நிற்கின்றேன் என்ன செய்வதென்று அறியாமல்...
ஆலாகி அழகியாயிட்டு என்று சொல்லி ஆனந்தமடைந்த
என்னை பெற்றவர்களுக்கு நான் கொடுக்கும் வாரம்தான் சபாமா...
என் தந்தை எலும்பை உருக்கி இரத்தத்தை பொலிந்து சேர்த்த பலவருட உழைப்பை அவன் ஓய்வு பெற என்றெண்ணி மகிழ்ந்த வயது போயிற்று..
வயதல் கனமகிட்டால் மகள் என்று சொல்லி நொடிப் பொழுதில் வந்தவனுக்கு இருந்த அவ்வளவையும் அள்ளிக்கொடுக்கொடுத்து கட்டி வைக்க நினைத்துவிட்டீர்கள்,
இப்போதுதான் உணர்கிறேன் பெண்ணாக பிறப்பதும் சாபம் என...
வரத்துக்கு கொடுக்கும் தட்சனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் வருவது வரமா சாபாமா என்று நான் துடிக்கிறேன்...
வாங்கும் தட்சனைக்கு அவன் வரதட்சனை எங்க என்னுள்ளம் இங்கு பிச்சை என்கிறது...
வேண்டமென மறுத்து காத்துகிடந்தேன் பிச்சை கேட்காமல் எவன் வருவான் என்று எவனும் வரவில்லை
கேட்கும் பிச்சையின் அளவும் கேட்பவர் அளவும் குறைவதே இல்லை என்று காலம் கற்றுத்தர
உங்கள் மனம் புண்படக்கூடாது என்று கழுத்து நீட்டினேன் ஆயிரம் அவலங்களை உள்ளுக்குள் புததைத்து..
இனியும் வேண்டம் இறைவா இந்த பெண் பிள்ளை வரம்...